Thursday, June 16, 2011

சிறுமியின் பெருந்தன்மை

சமீபத்தில் பெருமாள் கோவிலுக்கு போவதற்காக பல்லவன் வண்டியில் ஏறினேன்.டிக்கட்டு 3.50 ரூபாய்.கையிலோ 23 ரூபாய்தான். இருந்தது. சில்லறை இருக்கா அல்லது இல்லையா என்று பார்க்காமல் "சில்லறை இல்லை.விலையை சரியாக கொடு,இல்லாவிட்டால் கீழே இறங்கு" என்று நிர்தாக்ஷின்யமாக கண்டக்டர் சொல்லி விட்டார்.எவ்வளவு கெஞ்சியும் தயவு தாட்சிண்யம் இல்லாமல் கறாராக இருந்தார். யாரோ முன்பின் தெரியாதவர் 50 பைசா நாணயத்தை கொடுத்து என்னை கீழே இறங்கவிடாமல் தப்ப வைத்தார்.மனதில் ஒரு கனம்.முதலில் இருந்த உற்சாகம் மறைந்து விட்டது.

அன்று கோவிலில் பெருங்கூட்டம்.வாசலில் செருப்பை விட்டு உள்ளே சென்றேன்.ஒவ்வொரு முக்ய சன்னிதியாக சென்று பிரார்த்தித்து விட்டு வெளியே வந்தேன். சுமார் 9 வயது சிறுமியிடம் டோக்கனை கொடுத்தேன்.அடுத்த க்ஷணமே செருப்பை கொடுத்து ஐம்பது பைசா என்றாள்.ஜேபியில் கை விட்டேன்.அதே 20 ரூபாய் நோட்டு

."சில்லரை இல்லையே,அய்யா"என்றாள்.

"என்னிடமும் இல்லையே பெண்ணே,கொஞ்சம் பாரேன்" என்றேன்.

பக்கத்தில் உள்ள பூக்காரி தேங்காய் பழம் விற்பவர்களிடமும் கேட்டாள்.அவர்கள் கை விரித்து விட்டனர்.நானோ கைகளை பிசைந்து கொண்டு செய்வது அறியாமல் நின்று கொண்டிருந்தேன்.

"ஐயா இன்னொரு தடவை வரும்போது கொடுங்க.பரவா இல்லை" என்றாள் சிரித்தபடியே.களையான முகம்.குடும்பத்தின் ஏழ்மை தென்பட்டது. ஆனால் என்ன பதவிசு,தாராள மனப்பான்மை இந்த சின்ன வயதிலேயே.
ஒரு வேகத்தில் "இந்தா, நீ இந்த 20 ரூபாய் முழுக்க நீயே வெச்சுக்கோ.சில்லரை தர வேண்டாம்"என்றேன்.

"எனக்கு வேண்டாம்.நாளைக்கோ இல்ல எப்போது நீங்க இங்க வரீங்களோ கொடுத்தா போரும்" என்றாள்.

மனதில் அந்த கண்டக்டரின் உதாசீனமும் ஈரமில்லாத மனப்பான்மையும் இந்த ஏழை சிறுமியின் பெருந்தன்மையும் நிழலாட ஆரம்பித்தது..நற்குணங்கள் அந்தஸ்திலோ வயதிலோ சம்பந்த பட்டது இல்லை ,இயல்பாகவே வருபவை என்று புரிந்தது. இன்னொன்றும் தெரிந்தது.ஏற்கனவேயே சில்லறை இல்லாமல் பட்ட அவதியை மனதில் கொள்ளாமல் செருப்பை விட்ட என் முட்டாள்தனமும் புரிந்தது

8 comments:

  1. good one.. there r still humans in this world!!

    ReplyDelete
  2. Beautiful! Now please tell us if this is fact or fiction. Seems like fact but your fictions also sound like facts so I am confused...

    Either way, it is superb story telling. Thank you!

    ReplyDelete
  3. பதவியையும் அதிகாரத்தையும் மட்டுமே
    தகுதியாய் கொண்டவர்கள்
    இப்படித்தான் இருப்பார்கள்
    எப்போதும் மனிதத் தன்மையை
    கொண்டிருப்பவர்கள் எப்போதும்
    நல்லவர்களாகவே இருப்பார்கள்
    சிறுமியை மட்டும் சொல்லவில்லை
    உங்களையும் சேர்த்துத்தான்
    நல்ல பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. give the little girl the Rs. 20 and remain stranded I suppose...

    but kids sure have more compassion than the elders...

    ReplyDelete
  5. தங்களின் இந்த பதிவை வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழே உள்ள முகவரிக்கு வந்து பார்க்கவும்.
    http://blogintamil.blogspot.com/2011/10/6102011.html

    ReplyDelete
  6. வழக்கம் போல கலக்கலான கதை

    ReplyDelete