Monday, June 20, 2011

கல்யாணத்தில் சிறிய கலாட்டா

முகூர்த்த நேரம் நெருங்கி கொண்டிருந்தது.ஒரே கூட்டம், சந்தனமும் மல்லிகையும் ஹோமப்புகையும் சேர்ந்து கல்யாண மண்டபத்துக்கே உரித்தான மணம் .மேடையில் கல்யாண பெண்ணும் மாப்பிள்ளையும் புரோகிதர் சொல்வதை செய்து கொண்டிருந்தார்கள்.

அந்த சமயம் வாயிலில் ஒரு வாலிபன் 'பெண்ணின் அப்பாவை சற்று அவசரமாக பார்க்கவேண்டும்" என்று கேட்டுகொண்டிருந்தான். யாரோ என்னவோ என்று அவரும் அலறி புடைத்து கொண்டு மேடையிலிருந்து ஓடிவந்தார்.

"யாரு நீங்க?தெரியலையே.என்ன விஷயம் வேகமாக சொல்லுங்க"என்றார்.

"சற்று தள்ளி போய் தனியா பேசலாமா?"என்றான்.

"ஒண்ணுமில்லை ஒரு சின்ன விஷயம் உங்க காதில முதல்ல போடலாமேன்றுதான் உங்களை அழைத்தேன்.உங்களை ச்ரமப்படுத்தினதற்கு மன்னிக்கவும். காலேஜ்லேந்து லதா என்னோட காதலி.ரொம்ப நாள் நெருக்கமான பழக்கம்.அப்பா அம்மா நம்மோட காதலுக்கு ஒப்புக்கொள்ளமாட்டாங்க. இந்த கல்யாணம் நடக்க விடுங்க என்று ரொம்ப கெஞ்சினாள். நானும் சரியென்று சொல்லிவிட்டேன்.ஆனால் மனம் கேட்க மாட்டேங்கறது.ஒரே ஏமாற்றமாக இருக்கு.அப்புறம் ஏதாவது தொழில் ஆரம்பிக்க உதவி பண்ணுவதாக சொன்னாள்.கல்யாணத்துக்கு அப்புறம் அவளை சந்திக்க விருப்பமில்லை.அதுதான் உங்க கிட்ட வந்தேன்."என்றான்.

"எனக்கு ஒண்ணும் புரியலை.அவள் மேடையில் இருக்கா.அப்புறம் கேட்டு சொல்றேன்.எனக்கு வேலை நிறைய இருக்கு."என்றார் அப்பா.

"உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் லதாவையே பார்த்து பேசறேன்.ஆனால் ஏதாவது ஏடாகூடமாகி விடப்போறதுன்னு யோசனை. "என்றான்

"வேண்டாம் வேண்டாம்,உங்களுக்கு என்ன உதவி தேவை? சொல்லுங்க.நல்ல வேலை பார்த்து தரேன்."என்றார்

"வேலை வேண்டாம்.சொந்த தொழில் பண்ண ஆவல்.முதலீடு செய்ய பணம் தேவை"என்று இழுத்தான்.

கொஞ்சம் ரூமிற்கு வாங்க.அங்கே பேசலாம்"என்று அழைத்து சென்றார்.

"காபி சாப்பிடுங்க.ஒரு நிமிஷத்தில வந்துடறேன்"என்று போனார்
சிறிது நேரத்தில் பெண்,மாப்பிள்ளை பையனோடு வந்தார்.

இவன் சற்றும் எதிர் பார்க்கவில்லை.முகத்தில் பேயடித்தது.
சுதாரித்துக்கொண்டு "நான் வேணா அப்புறம் வந்து பேசிக்கறேன்.உங்க வேலையை கவனிங்க"என்றான்.

"இல்லை,இல்லை,இப்பொழுதே பேசி தீர்த்துக்கலாம்.எதற்கு தள்ளி போடுவது? லதா, நீ என்ன சொல்றே "என்றார்.

"முதல்ல இவர் யார், என்ன வேணுமாம் அதை சொல்லுங்க, அப்பா"என்றாள்

"உன்னோட ரொம்ப பழக்கமாம்.நீ அவருக்கு பண உதவி பண்றேன்னு சொல்லிருந்தாயாம்.அதனால ஒரு லக்ஷம் கொடுங்க என்கிறார்"என்றார் அப்பா

"எனக்கு இவர் யாருன்னே தெரியாது.எங்க ஆபீஸ் பக்கம் பார்த்து இருக்கேன்.இவரிடம் இதுவரை பேசினது இல்லை"என்றாள்.
.
அந்த சமயம் ஒரு போலீஸ்காரர் வந்து மாப்பிளை பையனை சல்யூட் அடித்து கமிஷனர் வந்து கொண்டு இருக்கிறார், சார்" என்றார்.

"சரி, இன்ஸ்பெக்டரை அனுப்பு உடனே" என்றான் மாப்பிளை பையன்.

வாலிபனுக்கு உதறல்.அவனுக்கு மாப்பிள்ளை பையன் போலீஸ்ல அதிகாரின்னு தெரிஞ்சு போச்சு. "நான் வரேங்க.என்னை விடுங்க"என்றான்.

அதற்குள் இன்ஸ்பெக்டர் வர அவரிடம் "இவரை நன்னா கவனித்து அனுப்பியுங்க."

அப்பாவை பார்த்து "இன்ஸ்பெக்டரிடம் எல்லாம் சொல்லி நன்னா கவனிச்சுக்க சொல்லுங்க" என்றான்.

"சரி சார்,நம்ம ஜீப் வண்டியிலேயே அவரை எந்த இடத்துக்கு போகணுமோ அங்கே அழைத்துக்கொண்டு போகிறேன்" என்று சொல்லி ஒரு சல்யூட் அடித்து அவனை தள்ளாத குறையாய் தள்ளிக்கொண்டு போனார்.

லதா மனதுக்குள் சிரித்துகொண்டாள்.
.

8 comments:

  1. கதையின் ஆரம்பமே உச்சக்கட்டம் போல்
    அத்தனை விறுவிறுப்பு
    எல்லாம் சரியாகத்தான் போச்சு
    கடைசியில் லதா மனதுக்குள்
    சிரித்துக்கொண்டாள் என்கிற ஒரு வரி...
    அடேயப்பா ஹைக்கூ கவிதையை விட அபாரம்
    சூப்பர் பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. @KP! That is an excellent narration; but leaves me wondering why Latha smiled. Now who is right?!

    Tried to comment several times yesterday in vain. Hope it goes thru' this time...

    ReplyDelete
  3. So Latha did know him...but probably she had confessed to her husband I suppose.............

    ReplyDelete
  4. அட! சூப்பரா விறு விறுன்னு போச்சு!!

    ReplyDelete
  5. ninga ezudhura yella kadhaiyilum oru twist irukku..
    at the end readers have a confused look!

    arumaiyana kadhai :)

    ReplyDelete
  6. Like the others, even I am intrigued about the smile at the end :)

    ReplyDelete
  7. Loved the 'twist' in the tale. The narration is superb!

    ReplyDelete