Wednesday, October 12, 2011

எழுத்தரின் சின்ன தப்பு

சின்ன கல்யாண மண்டபம்.வாசலில் தோரணம் ,கலர் விளக்கு,பெரிய கோலம்.ஜே ஜேன்னு கூட்டம்.உள்ளேயிருந்து மெல்லிசா மேள சப்தம் வந்து கொண்டிருக்கிறது.உள்ளே பழனிச்சாமியின் பெண்ணுக்கு நிச்சயதார்த்தம். எல்லோரும் வந்துவிட்டனர்.புரோகிதர் 7 மணி அளவில் ஆரம்பிக்க ஏற்பாடு.
பழனி சாமியின் பெண் அமிர்தா அலங்காரத்தோடு பளிச்சென்று நண்பிகள் கூட சிரிப்புடன் பேசிகொண்டிருந்தாள்.பட்டு புடவைகளில் பெண்கள் கூட்டம்.மல்லிகை வாசனை எங்கும். பழனிசாமி குறுக்கு நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.கடியாரம் 6.30-pm காட்டி கொண்டிருந்தது.முக்யமான உறவினர்கள் மேடைக்கு அருகில் இருந்தனர்.மாப்பிளை பையன் நண்பர்களுடன் சற்று தூரத்தில் காணப்பட்டான்.

திடீரென்று வாசலில் ஒரு கச முசா.என்ன ஏது என்று திரும்பி பார்க்கையில் ஜீப்பிலிருந்து இரண்டு போலீஸ்காரர்கள் கையில் தடியுடன் உள்ளே நுழைய எத்தனித்தனர்.எல்லோரின் தலைகளும் அங்கு திரும்பின.

"யாரையா பழனி?" என்று ஒரு போலீஸ்காரர் கூவ,பழனிச்சாமி பதட்டுத்துடன் அருகில் சென்றார்.பலர் அவரை சூழ்ந்தனர்.திடீரென்று அவர் சில்க் ஜிப்பா கலவரத்தில் தெப்பலாக நினைந்து விட்டது.

"நான்தான், பழனிச்சாமி.என்ன வேண்டும்?" என்று மென்மையாக கேட்டார்.

"இன்ஸ்பெக்டர் அய்யா உங்களை உடனே இட்டார சொல்லி உத்திரவு போட்டிருக்கார்" என்றனர். அதற்குள் மாப்பிள்ளை பையனோட தகப்பனார் அருகில் வந்து சேர்ந்தார்.

எதற்கு?நான் ஒரு புகாரும் கொடுக்கவில்லையே.போலீசுக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே.ஏதோ தப்பாக இருக்கு" என்றார்.
"எங்களுக்கு அதெல்லாம் தெரியாது.உங்களை கையேடு இட்டார சொல்லி உத்திரவு. கிளம்புங்க"

என்றார்.

"இங்க பெண் நிச்ச்யதாம்புலம் ஆரம்பிக்க உள்ளது.எல்லோரும் கூடியாச்சு .முடிந்தவுடன் வந்து பார்க்கிறேன்.இந்த சமயம் நீங்க இங்க இருப்பது சரியாக படவில்லை போன் நம்பர் கொடுங்க .அவரிடம் பேசுகிறேன். இன்னும் ஒரு மணியில் நானே அங்கு வந்து விசாரிக்கறேன் "என்றார் சாந்தமாக.

மாப்பிளை பையனின் மாமா"என்ன விஷயமாகன்னு கொஞ்சம் கோடி காண்பிச்சா உபயோகமாக இருக்கும்"என்று போலீஸ்காரரிடம் கையில் பர்சோடு வினவினார்.

"எங்களுக்கு சரியாக தெரியாது.அந்த பூக்கார பொம்பளை கண்ணீரும் கம்பலையுமா வயத்தை சாச்சிண்டு புலம்பிக்கொண்டு இருக்கா.யாரோ பழநியாம் இந்த கதிக்கு கொண்டு வந்துவிட்டு நழுவ பார்க்கிறானாம்"

"என்னய்யா உளறுகிறே.பார்த்து பேசு.ஏதோ ஆள் மாறாட்டம்.தப்பான இடத்துக்கு வந்து அசிங்கமாக பேசிண்டு இருக்கே.இப்போவே பெரிய இடத்துக்கு பேசறேன்.நான் யாரென்று தெரியுமா" என்றார் பழனிச்சாமி மிக்க கோபத்துடன்

"நீதான் மரியாதை இல்லாம பேசரே.ஏதோ பெரிய இடத்து மனுஷனாச்சேன்னு மரியாதை கொடுத்தா எகிறுகிறாயா? வா கையோடு"என்று கையை பிடித்தார் போலீஸ்காரர்.

மண்டபத்தில் ஒரே கசமுசா.பழனிச்சாமியின் மனைவி வாயை பொத்தி அழ ஆரம்பித்து விட்டாள்.உறவினர்கள் முகங்களில் ஈயாடவில்லை. மேள சப்தம் நின்று விட்டது. பையனை சேர்ந்தவர்கள் வாயில் முகப்பில் கூடிவிட்டனர்.

அதே சமயம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் எழுத்தரை கடுமையாக சாடி கொண்டு இருந்தார்."எவ்வளவு வருஷமாக வேலை பார்க்கிறே?மொட்டையா பழனி நு எழுதி இருக்கியே.இந்த வடபழனி ல எல்லோரும் பழனி தான்.அந்த பொம்பளையை ஆள் வயது என்ன,எப்படி இருப்பான்,விலாசம் என்ன,கருப்பா வெளுப்பான்னு என்று ஒன்னும் கேக்காம என்னய்யா எழுதி இருக்கீங்க அந்த ப்ருஹஸ்பதிங்க ரெண்டு பேரும் யாரவது தப்பான ஆளை கூட்டி வந்தா என்னோட வேலை போய்விடும் தெரியமா?முட்டாள்களோடு மாரடிக்க வேண்டிருக்கு"என்று புலம்பினார்.

"ஏம்மா வாயை மூடிண்டுருக்கே?அந்த பழனி யாரு எப்படி இருப்பான்னுசொல்லு"

உடலை நாணிக்கொண்டு சற்று சிரிப்புடன் "அம்சமா இருப்பான்.28 வயது இருக்கும்.கொஞ்சம் குள்ள பையன்.,.எங்க இருக்கான்னு சொல்ல மாட்டான்.ஆனால் அடிக்கடி வந்து போய்கொண்டு இருப்பான்.நன்னா ஆசையா இருப்பான். நிறைய பணம் கொடுப்பான்.என்னோட புருஷன் சோடை. குடிச்சுட்டு வெளில தேமேன்னு கிடக்கும்.ஒன்னும் கண்டுக்காது."

அந்த சமயம் வாசலில் ஜீப்பும் பல கார்களும் சரக் சரக்கென்று வந்து நின்றன..

சில்க் ஜிப்பால உசரமாக ஆஜானுபாகுவாக சற்று குனிந்த தலையுடன் கலவரத்துடன் பழனிச்சாமி நுழைந்தார். இன்ஸ்பெக்டர் முகத்தில் 1000 வோல்ட் ஷாக்கு.எழுந்து நின்றார்

"பெண்ணோட நிச்சய தாம்பூலம் நடக்கிற சமயம் இவங்க அங்கு வந்து அசிங்க படுத்தி விட்டாங்க.என்ன சொல்லியும் கேட்கவில்லை.என்னை எதற்கு வர சொன்னீங்க?சீக்கிரம் சொல்லுங்க.அங்க என்ன நிலவரம் என்று புரியாம குழம்பி கொண்டு இருக்கேன்"என்றார்.

அந்த பொம்பளை'இவர் இல்லை.பெரிய மனுஷனாச்சே" என்று கூறி கொண்டிருந்தாள்'

"மன்னிக்கவும்.இந்த மடையன்கள் இடம் ,பொருள் தெரியாமல் ஆள் மாராட்டம்னு புரிஞ்சுக்காமல் உங்களை அனாவசியமாக தொந்திரவு பண்ணி விட்டார்கள்.ரொம்பவும் தாழ்மையுடன் எங்களை மன்னிக்க வேண்டுகிறேன்"என்றார் இன்ஸ்பெக்டர்

மறு வார்த்தை பேசாமல் அந்த க்ஷணமே வந்தவர்களுடன் மண்டபத்திற்கு விரைந்தார்.மண்டபம் விரிச்சோடி கொண்டிருந்தது

5 comments:

 1. போலிஸ் வேலைக்கு லாயக்கில்லாதவனையெல்லாம் வச்சிருந்தா இதுக்குமேலையும் நடக்கும்.

  ReplyDelete
 2. Namba policekkaarangalukku correctaa lanjam vaangaththaan theriyum, janagalaippaththi kavalai illai!

  Their mistake has spoiled the reputation of Pazhanichchami's family for generations to come!

  ReplyDelete
 3. ஆள் மாறாட்டம் என்னவெல்லாம் செய்து விடுகிறது?!

  ReplyDelete
 4. நன்னா எழுதியிருக்கேள் நோக்கு நன்னா சிறுகதை எழுத வர்றது நேக்கு என்ன தொன்ற்துன்னா நல்ல இலக்கியதரமுள்ள இதழ்களுக்கு அனுப்பலமொன்ன சட்டுன்னு செய்ங்கோ பாராட்டுகள் .

  ReplyDelete