Thursday, October 11, 2012

வத்சலாவின் பாக்கியம்

திருவல்லிகேணியில் தொளசிங்க பெருமாள் கோவில் தெருவில் ஒண்டு குடித்தனம்.இருட்டா சிமென்ட்   பெயர்ந்த தரையோடு சின்ன இடம். கோவிலுக்கு சொந்தமோ என்னவோ வாடகை அதிகமில்லை.காலி பண்ண சொல்லும் அபாயமும் இல்லை.வத்சலாவும் வரதனும் அன்யோன்யமான தம்பதி  சண்டை சச்சரவு கிடையாது.அவன் கொண்டு வரும் குறைந்த பணத்தில் குடும்பத்தை நடத்தி கொண்டிருந்தாள்.வரதன் கல்யாணம் கார்த்திக்கு சமையல் பண்ண போவான்.சில மாதங்கள் தவிர வருஷம் பூராகவும் வேலை இருக்கும்.நடுவில் இரண்டு மூன்று நாட்களுக்கு வெளியூருக்கு போகும்படியாக இருக்கும்.பத்து வயதில் ஒருபெண்ணும் எட்டு வயதில் ஒரு பையனும் உண்டு.படுத்த படுக்கையாக வத்சலாவின் அம்மாவும் அவளிடம் தான் இருந்தாள்.அண்ணன் அம்மாவை பார்த்துக்க முடியாது என்று இவளிடம் தள்ளி விட்டான்.வரதனும் நம்மோடு இருக்கட்டும் என்று சொல்லிவிட்டான்.
கஷ்ட ஜீவனம்தான்.வருமானம் போறாது தான்..பள்ளிகூட சம்பளம் அளவுக்கு மீறி வாங்குகிறார்கள்.  விலை வாசி எக்கச்சக்கமாக ஏறி கிடக்கிறது. .  கிணற்று தண்ணீர் கொஞ்சம் உப்பு. குழாய் வீட்டுக்கு வெளியில்தான். குழாய் அடியில்  எப்பொழுதும் கூட்டம்தான். இவ்வளவு கஷ்டத்திலும் வத்சலா சிரித்த முகத்தோடு மென்மையாக பேசுவாள்.பார்க்கவும் களையாக இருப்பாள்.தன் கஷ்டத்தை வெளியில் சொல்லமாட்டாள். பார்த்தசாரதி பெருமாள் கோவிலுக்கு எப்படியாவது ஒரு நடை போவாள்.அங்கு நரசிம்மரிடம்   தன் குறையை சொல்லி கொண்ட பிறகு அவள் மனம் லேசாகிவிடும்.
ஒரு ஞாயிறு.வரதன் திருநாகேஸ்வரம் போயிருந்தான். ஒப்பிலியப்பன் கோவிலில் கல்யாணம்.வத்சலா பத்து மணிக்கெல்லாம் தளிகையை முடித்து விட்டாள்.மெந்திய குழம்பும் கீரை மசியலும் தான்.குழந்தைகள் பக்கத்தில் எங்கோ விளையாடி கொண்டிருந்தார்கள்.அப்பொழுது  சுமார் 70  வயதுக்கு மேல் உள்ள ஒரு முதியவர் வந்தார்.ஒடிசலாக கண்ணில் பசி மயக்கத்தோடு காணப்பட்டார்."அம்மா,இங்கு பெருமாளை தரிசிக்க வந்தேன்.என்னோட பெயர் நரசிம்மன்..இங்கிருந்து சிங்க பெருமாள் கோவில்  பக்கம் போகணும்.ஒரே பசியாக உள்ளது."
"உள்ள வாங்க மாமா.பெரிசா வஞ்சனம் இல்லை.இருப்பதை போடுகிறேன்.கிணத்தடியில் கைகால்களை    அலம்பி கொண்டு வாருங்கள்"என்றாள்
வாழை இலை இல்லை..மந்தார  இலையில் தாராளமாக அன்னமிட்டாள்.அவரும் திருப்தியோடு சாப்பிட்டு முடித்தார்.வாச திண்ணையில் உட்கார்ந்துகொண்டு அவள் குடும்ப நலனை விசாரித்தார்.அவளுடைய ஏழ்மை நன்றாக புரிந்தது.
"வத்சலா, என் கைவசம் காசு கிடையாது.ஆசீர்வாதம் தான் பண்ணமுடியும்.நீ தீர்க்க சுமங்கலியாக   சுபிக்ஷமாக இருப்பாய்.'என கூறி மடியிலிருந்து ஒரு சாளக்ராமத்தை   கொடுத்தார்."இதை பூஜை பண்ணுமிடத்தில் வைத்து பாலோ,சக்கரையோ எது முடியுமோ அதை தினம்  நைவேத்தியம் பண்ணு.உனக்கு வெகு சீக்கிரம் செல்வம் வந்து ஏழ்மை அகலும்..எப்பொழுதும் போல் பக்தியையும் மனிதாபிமானத்தையும் விடாமல் இரு." எனக்கூறி  சென்று விட்டார்.
அன்று மாலையில் அவள் நரசிம்மர் சந்நிதியில் வேண்டி கொண்டிருக்கும் போது அர்ச்சகர் அவளிடம் வந்து "வத்சலா, உனக்கு ஏதாவது சாளக்ராமம் கிடைத்ததா"என வினவினார்.அவளுக்கு தூக்கி வாரிபோட்டது.
"மாமா உங்களுக்கு எப்படி தெரிய வந்தது?யாரும் உங்களிடம் சொன்னார்களா?"
"ஆமாம்,நீ நம்ப மாட்டாய்..சொப்பனத்தில் அதிகாலையில் நரசிம்மரே வந்து சொன்னார்.எனக்கு உடலெல்லாம் புல்லரிப்பு.இதுதான் முதற் தடவை என்னுடைய பகவான் எனக்கு காட்சி   அளித்து பேசினது..உடனேயே முழிப்பு வந்து என்னை கிள்ளி பார்த்து கொண்டேன்.அதுதான் உன்னை கேட்டேன்.யார் கொடுத்தார்/எப்படி கொடுத்தார்?விவரமாக சொல்லு.ஒரே பரபரப்பாக இருக்கு எனக்கு"என்றார்..
அவள் விவரமாக சொன்ன பிறகு"என்னே,உன் பாக்கியம்.உன் வீட்டில் உன்கையால் பரிமாறின உணவை உட்கொண்டு உன்னை ஆசீர்வதித்து இருக்கிறார்.உன்னுடைய பக்திதான் உனக்கு உதவி உள்ளது.நான் வந்து சாளக்ராமத்தை வந்து சேவிக்கலாமா?"
மறு நாள் காலையில் வரதன் ஒரே குதூகலத்தோடு வந்தான்.
"வத்சலா,நல்ல சமாசாரம் சொல்ல போகிறேன்.இனி நம் வாழ்க்கை நல்லபடியாக அமையும்"என்றான்
"என்ன ஏதாவது லாட்டரில   பரிசு நிறைய கிடைச்சுதா?"   
"அதெல்லாம் இல்லை.நான் எந்த பெரியவரிடம் வேலை பண்ணிக்கொண்டு இருக்கேனோ     அவர்   எல்லா பொறுப்பையும் என்னிடம் கொடுத்து விட்டு தன மகனோடு இருக்க போவதாக சொல்லிவிட்டார்.வயது கூடியதால் பையன் பண்ணினது போறும் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டானாம்  .தன்னோட மொபைல் போனையும் கொடுத்து விட்டார்." என்றான்
"மனதுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு.எல்லாம் நரசிம்மரின் அருள்  "என்றாள்.
"ஆனால் பெரியவர் கூடவே ஒரு அறிவுரையும் சொல்லி இருக்கிறார்.செய்யும் தொழிலில் பக்தியோடும்  ,நியாயமும் நேர்மையும் இருக்கனுமாம்.பேராசை படக்கூடாது.பார பக்ஷமின்றி எல்லா நிலையில் உள்ளவர்களுக்கும் நல்லபடியாக செய்து கொடுக்கவேண்டும் என்று வற்புறுத்தினார்.சத்தியமும் வாங்கிகொண்டார்" என வரதன் பெருமிதத்துடன் கூறினான்.
நான்கு வருடத்திலேயே தொழிலில்   நன்றாக முன்னேறி விட்டான். நிறைய ஆட்களை சேர்த்துக்கொண்டு நன்றாக சம்பாதிக்கலானான்.வீட்டில் செழுமை.
ஆனால் வத்சலா திருவல்லிகேணியை விட்டு வேறு எங்கும் மாற மாட்டேன் என்று கூறிவிட்டாள்.  இன்றும் நரசிம்மர் சந்நிதியில் காலையிலும் மாலையிலும் அவளை காணலாம்.அதே சாந்தமும்,புன்சிரிப்பும் அவளிடம் ஒரு மாற்றமும் இல்லை.


.

.

. 

.

18 comments:

  1. Arumaiyaana kadhai. It happens in real life for some too. Vatsala koduthu vaithaval.

    ReplyDelete
  2. Lakshmi Gopal writes
    Ungaludaiya Kadhai manadhai thottadu. I tried posting my comment but did not succeed in sending it. Nothing like sincere prayer to get the grace of God. That is what I wanted to say. I am so glad you are able to churn out so many good stories.

    ReplyDelete
  3. Romba nalla eluthiirukkeenga KP! Hats off!

    ReplyDelete
  4. Vasanta Rajagopaln writes to say

    "Miracles are all around us; we must open our eyes to see them"....
    A pragmatist might argue that even without the Saligram gift incident Vatsala's family would surely have become prosperous.But a miracle is actually seeing the extraordinary in the ordinary and the Divine hand of God in the natural occurrences of our life.
    Beautifully said, Partha sir !
    Vasanta.R.

    ReplyDelete
  5. பாக்கியம் பெற்ற தம்பதிகள்!

    ReplyDelete
  6. கதையன்றி நிஜமோ?

    ReplyDelete
    Replies
    1. கற்பனைதான். மிக்க நன்றி

      Delete
  7. ் அற்புதமான கதை..நன்றாக எழுதுகிறீர்களே !

    ReplyDelete
  8. அருமையான படைப்பு!!!

    ReplyDelete
  9. Beautiful. God does wonders in so many ways.

    ReplyDelete
  10. கொஞ்சம் நாட்களாக உங்கள் தமிழ் வலைப்பதிவை படிக்கவேண்டும் என்று ஆசை. இப்பொழுது தான் நிறைவேறியது.

    கதை அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
    ஆந்கிலத்தை போலவே, சுவையும் மணமும் தமிழிலும் உள்ளன.
    வாழ்த்துக்கள்.

    உங்கள் ஆங்கில வலைப்பதிவுகலில் சிறுகதைகள் தொடர்ந்து எழுதுவீர்கள், இல்லையா ?

    ReplyDelete
  11. ஸ்ரீஜா ,
    ஆச்சர்யமாக உள்ளதே.உங்களுக்கு தமிழ் தெரிய வாய்ப்பில்லை என்று தப்பாக நினைத்தேன்.ரொம்ப சந்தோஷம்.தமிழ் வலைப்பூவில் தான் எழுதுவது குறைந்து விட்டது.யாரும் படிக்க வருவதில்லை.ஆனால் தமிழில் எழுத பிடிக்கும்.
    ஆங்கில வலைப்பூவில் தொடர்ந்து எழுதிக்கொண்டு தான் இருக்கிறேனே..ஏன் சந்தேகம்?.படிப்பவர்களுக்கு அலுப்பு தட்டகூடாது என்று சற்று இடைவெளி கொடுக்கிறேன்.
    உங்கள் எழுத்தை எல்லாம் விடாமல் படிக்கிறேனே.
    என்னுடைய ஈமெயில் kpartha12@gmail.com

    ReplyDelete
  12. Captivating story. Enjoyed reading. I was about to ask if it was based on a real incident, but then saw Kaviyazhi Kannadasan's comment and your reply. Sorry, I'm not Conversant and upto speed in Tamil typing.

    ReplyDelete
  13. It feels like a real incident. Faith brings in the Lord's grace and not an iota of doubt should spoil it. Beautifully narrated!

    ReplyDelete
  14. You know I believe in miracles and such happenings that take place in countless devout believers' lives. But still reading it, with such beautiful word pictures is soul-satisfying. Thank you!

    ReplyDelete
  15. I believe in these types of incidents. They happen in real life. Nambikkai irundhaal yellaam nalladhu nadakkum. Nalla manasu venum. Enjoyed this story and narration.

    ReplyDelete
  16. அற்புதமான கதை. அருமையான படைப்பு.

    ReplyDelete