பதினைந்து தளங்கள் கொண்ட பெரிய அடுக்கு மாடி கட்டடம். சுமார் நூறு அபார்ட்மெண்ட்கள் இருக்கலாம். நாலாவது மாடியில் ரேணுவும் மங்களாவும் பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்தார்கள்।.இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயசு,அவர்கள் குழந்தைகளும் ஒரே பள்ளிக்கூடம். ரொம்ப அன்யோன்யம்.
"மங்களா, இந்த கோவிட் வந்தாலும் வந்தது நம்ம அஸோஸியேஷன் கமிட்டீ பண்ணுகிற அட்டகாசம் தாங்கலை.இத்தனை நாள் வரை காய்கறிகாரன் பத்து மணிக்குள்ள ஒழுங்கா வந்து எல்லோருக்கும் கொடுத்து விட்டு போய்விடுவான். இன்னிக்கு வரலையேன்னு விசாரிச்சா காம்பௌண்ட்க்குள்ல வரக்கூடாதுன்னு ஆர்டராம். முன்னாடியே சொல்லக்கூடாதோ. தட்டி கேட்க ஆள் கிடையாது," என்று ரேணு அங்கலாய்த்தாள்.
"இவர் தொடை நடுங்கி! எல்லா ஆணவமும் என்னிடம் தான்,வெளியில் வெறும் பூனைதான்,அடிச்சி சொல்ல பயம்।"என்று சிரித்தாள்.
"அது போகட்டும். உனக்கு இந்த விஷயம் தெரியுமோ, மங்களா? உன்னிடம் சொல்லாம மண்டை வெடிச்சிடும் போல இருந்தது," என ரேணு கிசுகிசுத்தாள்.
"அது என்ன சுவாரஸ்யமான விஷயம்? யாரை பற்றி அந்த மேனாமினுக்கி யா?"மங்களா கேட்டாள்.
“பாவம் அவள் இல்லை. தினமும் வேறு வேறு அழகான உடைகளில் பார்ப்போமே,அந்த வாணி சொல்லிக்காத கொள்ளிக்காத ஓடிவிட்டாளாம். "என்னை தேட வேண்டாம்" னு ஒரு குறிப்பு எழுதி வெச்சுட்டு போய் விட்டாளாம்.ஒரு வயது குழந்தை வேறு.பாவம்,அவள் புருஷன் அதை கைல வெச்சுண்டு அலையறதை பார்த்தா மனசை பிழிஞ்சி எடுத்து விட்டது,” என மூக்கை சிந்தினாள் ரேணு .
" அது எப்படி? பார்த்தா நல்ல பொண்ணு மாதிரி தானே இருந்தாள் கல்யாணம் ஆகி ரெண்டு மூன்று வருஷம் தான் இருக்கும். அவள் கணவனும் அவன் உண்டு அவன் வேலை உண்டுன்னு நல்லவனா தானே இருந்தான்.ஏன் இப்படி? ஏதோ தப்பாக சொல்றேன்னு தோன்றுகிறது,"மங்களா சந்தேகத்துடன் சொன்னாள்.
"யார் கண்டா எந்த புற்றுல எந்த பாம்பு இருக்கும் என்று? ஒரு வேளை அவள் விருப்பத்திற்கு மாறாக அவள் அப்பா அம்மா இவன் தலைல கட்டி இருக்கலாம். அதுதான் பிடிக்காம பழைய காதலனோடு ஓடிவிட்டாள். "
"அது சரியில்லையே. கல்யாணம்னு ஆன பிறகு காதலனை துண்டித்து இருக்க வேண்டாமோ? நீ என்ன நினைக்கறே, ரேணு?" என மங்களா வினவினாள்.
"நான் என்ன நினைக்கறதுக்கு, அக்கம் பக்கத்தில் பேசிக்கறது அந்த ஆள் அடிக்கடி அவளை சந்திப்பானாம். கர்மம்!,நாடு குட்டி சுவ்ரா போயிண்டு இருக்கு,"என்று ரேணு புலம்பினாள்.
"கிட்ட வா நான் ஓண்ணு சொல்லட்டுமா? அவள் காதலனை நானும் பார்த்து இருக்கிறேன்.அழகுன்னா கொள்ளை அழகு, என்ன உடல் வாகு, என்ன கம்பீரம்!அவள் புருஷனோ கட்டை குட்டையா பார்க்கவே கோரமா இருப்பான்.அவள் நிலையில் இருந்தால் நானே ஓடி இருப்பேன்,"என மங்களா கிசுகிசுத்தாள்.
ரேணு சிரித்தவாறே சொன்னாள்,"இன்னொரு விஷயம் தெரியுமா உனக்கு? அந்த வாணி ஆறு மாதம் கர்ப்பமாம்".
"அட பாவமே, எனக்கு தெரியவே தெரியாதே. சரி சரி கார் ஹார்ன் சப்தம் கேட்கிறது. என்னோட புருஷன் வரார்.காபி போட போகணும். அப்புறம் வாணிக்கு என்ன ஆச்சுன்னு முழுவதும் தெரியணும்.ஒன்னையும் விடாமல் சொல்லு. இந்த ரெண்டு நாட்களாக டிவி சீரியல் பார்க்கவே முடியலை. இவர் டிவி ரிமோட்டை தன கையில் வெச்ச்சுண்டு கோவிட் நியூஸையே பார்த்துண்டு இருக்கார்.வீட்டில ஒரே ஒரு டிவி। அரை மணியில் வந்துடறேன்। " என்று சொல்லி கொண்டே நகர்ந்தாள்।
Hilarious story. Real twist
ReplyDeleteOh! So they were talking about tv serials?! Interesting read! 😁 Good one KP!
ReplyDeleteVery funny twist. You are great at narrating such stories with twists. Thank you , Periappa , for a nice treat
ReplyDeleteTake care
Chitra Solomon
Couldn't believe the 'truth' till the end. Very good narration! My mother used to get involved about the TV serials like this. This story reminded about her. She was always thinking about the 'story' and kept on commenting like these women often! Sometimes we didn't know about whom she was talking. Nice one!
ReplyDeleteThe power of observation—of being aware of and noticing what is around us—is a natural human faculty that we are all born with. But only a writer as sharp as you, Partha Sir, is able see, no perceive, more than what meets the eye!!Absorbing anecdote, laced with wry humor :-)
ReplyDeleteExcellent story. Looks like a Vadivelu comedy. He would take 4 ladies in his autorikshaw. During the ride he would be listening to their conversation. Really took pity on the pregnant woman who was mistreated by her mother-in-law. When dropped them off he would come to know the passengers were talking about a TV Serial.
ReplyDeleteHaha. Very funny.
ReplyDeleteExcellent and hilarious story.
ReplyDeleteகேபி சாருக்கு நகைச்சுவையும் நன்னா எழுதவருகிறது! ரசித்தேன்!
ReplyDeleteHaha mask pottundala mamis..nice narration
ReplyDeleteExcellent . Very funny . Yaaaa vambu is there everywhere .
ReplyDeleteI am unwell. I cld not see yr posts or leave comments. Pl bear with me for a week
Delete