Sunday, November 14, 2010

இப்படியும் இந்த காலத்தில் ஒரு சிலர்-4

தஞ்சை பெரிய கோவில்
நாங்கள் சமீபத்தில் குடும்பத்தோடு தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் சென்று இருந்தோம்.பார்த்தவுடனேயே அதன் கம்பீரமும் பிரம்மாண்டமும்.எங்களை ஒரு பிரமிப்பில் ஆழ்த்திவிட்டது..சரி,மிகவும் கவனமாகவும் உன்னிப்பாகவும் பார்க்க தீர்மானித்து யாராவது வழிகாட்டினர் (guide)அகப்படுவாரா என்று கண்களை சுழல விட்டோம்..ஒரு அறுபது வயதுள்ள நபர் அருகில் வந்து "கூட்டமாக வந்து இருக்கிறீர்களே, இதுதான் முதல் தடவையா" என்று கேட்டார்..

“ஆமாம்” என்றோம் '

“சரி என்னுடன் வாருங்கள். எல்லாவற்றையும் விவரமாக சொல்கிறேன். .நான் பல தடவை வந்து இருக்கிறேன்" என்றார். மிகவும் நல்லதாக போச்சு என்று அவருடன் வழி நடக்கலானோம்.

ஒரு ஒரு இடமாக நின்று அவசரப்படாமல் முக்யமான அம்சங்களை விவரித்தார்.. அவர் சொன்னதின் சாராம்சம் சுருக்கமாக இதுதான்.

.இது பழமையான சிவாலயங்களில் ஒன்று.. இந்த ஆலயம் சமீபத்தில் தனது 1000 ஆண்டுகளைப் பூர்த்தி செய்தது. .தஞ்சையை ஆண்ட ராஜ ராஜ சோழன் கி.பி. 1010-ல் 216 அடி உயரமுள்ள இந்தக் கோவிலை கட்டினார்.

.ராஜராஜ சோழனால் கட்டப் பெற்ற கோவில்களில் தஞ்சைப் பெரிய கோவில் ஒப்பற்ற கோவிலாகத் கருதப்படுகிறது.. "கட்டடக் கலை, சிற்பக் கலை, செப்புத் திருமேனிகள் வார்ப்புக்கலை, ஓவியக் கலை, கல்வெட்டுகள் கூறும் செய்திகள் ஆகிய அனைத்துக்கும் சிறப்பிடமாகத் திகழ்கிறது".இக்கோவில், உலக வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால், நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது.

கருவறைக்கு மேலே உள்ள விமானம், 13 தளங்களையும், 216 அடி உயரமும் கொண்டு கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.இறைவனுக்கு மேலே உள்ள விமானத்தின் உட்கூடு, வெற்றிடமாக, அமைந்துள்ளது இக்கோவிலில் காணப்படும் கல்வெட்டுகள், மிக அழகாகப் பொறிக்கப்பட்டுக் காணப்படுகிறது.

இக்கோயிலின் கட்டிடக்கலை, சோழர்காலக் கட்டிடக்கலைக்கு நல்ல உதாரணமாகும்.. இந்த கோயிலில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இந்த நந்தி 14 மீ உயரம், 7 மீ நீளம், 3 மீ அகலம் கொண்டது.

இந்த கோவிலில் 35 உட்கோயில்கள் உள்ளது.. நான்கு திசைகளிலும் இந்த உட்கோயில்கள் உள்ளன.

இக்கோயிலின் கோபுரத்தின் நிழல் எப்போதும் கீழே விழாது.

எல்லாம் செவ்வனே சுற்றி பார்த்தபிறகு அவரிடம் மிகுந்த நன்றி சொல்லி 500 ரூபாயை நீட்டினோம்.அவர் சிரித்துகொண்டே "நான் guide இல்ல நான் ஒரு archealogist .குடும்பமாக ஆவலுடன் வந்து இருப்பதால் உங்களுக்கு உதவலாமே என்கிற எண்ணத்துடன் வந்தேன்..திருப்தியாக இருந்ததா?'என்றார்

ஒரு வெட்க உணர்ச்சியுடன் "தவறாக மதிப்பிட்டதற்கு மன்னிக்கவும்..உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை..சென்னை வந்தால் கட்டாயமாக எங்கள் வீட்டுக்கு வர வேண்டும். "என்று விலாசத்தை கொடுத்தோம்.

இப்படியும் சில நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்.. .


8 comments:

  1. அன்புள்ள கெ .பி! தஞ்சைக் கோவில் என்றுமே ஆச்சரியம் தான்! தமிழரின் பெருமைச்சின்னம்.
    ஆனாலும் இந்தக் கோவில் பற்றி சில myths உண்டு. அதில் //இக்கோயிலின் கோபுரத்தின் நிழல் எப்போதும் கீழே விழாது// என்பதும் ஒன்று. கோவிலின் நிழல் விழும் புகைப் படங்களைப் பார்த்திருக்கிறேன்.
    ஆனாலும் காலத்தின் நிழல் அதன் மேல் விழாத சாதனை எழுச்சியல்லவா அது!

    ReplyDelete
  2. ஒரு சிலரைத்தவிர எந்த ஊரில் கைட்ஸ் இவ்வளவு அழகாக விவரம் தருகிறார்கள்....

    ReplyDelete
  3. There is a lesson to be learned apart from the appreciation..unconditional concern for others is a virtue that can be developed,isn't it?

    ReplyDelete
  4. If this is fiction fine. If it is a real happening, the person may not be an Archeologist , because the shadow of the tower can be seen on the ground sometime during the day, the shadow not falling on the ground is a Myth.
    Shobha

    ReplyDelete
    Replies
    1. This is a fiction.But I have read such a thing somewhere.You must be correct as you have seen the shadow

      Delete
    2. Thank you sir. Here is a link you may find interesting
      http://bigtemple.in/rajarajisvaram-certain-revelations#more-13

      Shobha

      Delete
    3. நான் ஏதோ கேள்விப்பட்டதை வைத்து கதை எழுதப்போய் இவ்வளவு அருமையான விஷயங்கள் பின்னணியில் இருக்கிறது கண்டு ஆச்சரியப்படுகிறேன்.நீங்கள் அனுப்பிய லிங்கை..வேகமாக படித்தேன் .நிதானமாக
      படிக்கிறேன்.அக்கறையுடன் அனுப்பி வைத்தமைக்கு உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றி.இனி ஜாக்கிரதையாக எழுதுகிறேன்

      ஆங்கிலத்தில் தான் நிறைய சிறு கதைகள் எழுதுகிறேன்.உங்களுக்கு நேரமும் விருப்பமும் இருந்தால் படியுங்கள்,www.kparthas.blogspot.com
      KP(kpartha12@gmail.com).. .

      Delete