Thursday, November 18, 2010

பொறுமையின்மை

காலை நேரம். ராகவன் டெலிபோனில் வாசல் ரூமில் ரொம்ப முக்கியமா பேசிக்கொண்டு இருக்கிறார்.அவர் ஆறு வயது குழந்தை அவருடைய காலை பற்றி "அப்பா,அப்பா "னு கூப்பிடறது.

"தூர போ.தொந்திரவு பண்ணாதே" னு சள்ளுன்னு விழுந்தார்.

குழந்தை நகராமல் 'அப்பா,அப்பா ,கொஞ்சம் கேளேன்' னு சொல்லறது.

"சனியனே,சொன்னா கேழ்கமாட்டே.இந்த க்ஷணம் போகலையானா
கொன்னுபுடுவேன்.ஜாக்கிரதை" னு கத்தறார்.

அதுவோ அடமாக "அப்பா கொஞ்சம் இங்க வா'னு . கையை பிடிச்சு இழுத்தது.

ராகவனுக்கு ஒரே கோபம் வந்துடுத்து."sorry,one second, will be right back"னு சொல்லிட்டு அந்த குழந்தை முதுகில சாத்தினார் ஒரு அறை.
"அப்பா,, சமையல் உள்ளே அம்மா மயக்கமா கீழ விழுந்துட்டா.gas ஒரே எரியறது .பயமா இருக்கு"னு அழுதுண்டே உள்ளே ஓடறது

4 comments:

  1. தந்தையின் அசட்டையான நடவடிக்கையை பொருட்படுத்தாமல் சிறுவன் தாயைக் காப்பாற்ற முயற்சி செய்தது மெச்சத் தக்கது .
    மிக நேர்த்தியாக எழுதப் பட்ட சம்பவம் .ஆசிரியருக்கு என் பாராட்டுக்கள் .
    வசந்தா.ரா.

    ReplyDelete
  2. Good one! Glad to visit your blog. It feels like finding a treasure box - that too you have three blogs. Wow! Will be back at leisure to read more...

    ReplyDelete