Saturday, April 15, 2017

இன்பக்கனா கண்டேன்

நான் ஒரு சராசரி மனிதன். நாத்திகன் அல்ல.கடவுள் நம்பிக்கை உண்டு.
குளித்தவுடன்விளக்கேற்றி   ஒன்றிரண்டு ச்லோகங்கள்சொல்வதோடுசரி. மறுபடியும் கடவுளை பற்றிய எண்ணம் அடுத்த நாள்தான். கதை காலக்ஷேபத்திற்கு போவது கிடையாது.ஆன்மீகத்தில் அவ்வளவாக ஈடுபாடு கிடையாது.
டில்லியில் என் மனைவியுடன் வாசம். சினிமா,ஹோடட்டல் ,மால் தவிர வேற எங்கும்  போவது இல்லை.
திடீரென்று ஒரு புதன் இரவு கனவில் கடவுள் தோன்றி  “ இன்னும் ஒரு வாரத்திற்குள் நீ என்னை சந்திப்பாய்” எனக்கூறி  மறைந்து விட்டார்.கனவில் வந்த பகவான் எந்த ரூபமென்று சரியாக புலப்படவில்லை.ஒருவேளை கிருஷ்ணராகவோ ராமராகவோ இருக்கலாம் என சந்தேகம். நான் ராமயணத்தையோ பாகவதத்தையோ சமீபத்தில் படிக்கவில்லை. ஒவ்வொருவன் கோவிலென்ன குளமென்ன என்று சுற்றுகிறான்.அவங்களை விட்டு விட்டு பின் ஏன் எனக்கு  இந்த கனவு என்கிற குழப்பம்.மனைவியுடன்  இதை  பற்றி மூக்சு விடவில்லை. அவள் ஏதாவது விபரீதமாக அர்த்தம் பண்ணி கொண்டால் என்கிற பயம்தான். கனவை மறந்துவிட்டு என் வேலையில் மூழ்கிவிட்டேன்.
வெள்ளி இரவு மனைவியுடன் டி வி பார்த்துகொண்டு இருந்தேன்.என் நெருங்கிய நண்பன் கந்தசாமியிடமிருந்து ஃபோன்.”நாளை ஆபீஸ் விஷ்யமாக டில்லி வரேன். சன்டே  அன்றைக்கு காரில் ப்ருந்தாவன்  அழைத்துகொண்டு போகமுடியுமா? ரொம்ப நாட்களாக ஆசை. ஆக்ரா, மதுராவெல்லாம் இப்பொழுது வேண்டாம்.அதற்கு நேரமில்லை.”என்றான்.சம்மதத்தை உடனே தெரிவித்தேன்.
மனைவி தான் வரவில்லை என கண்டிப்பாக சொல்லிவிட்டாள் .
அங்கே போன பிற்குதான் அங்கு நூற்று கணக்கான க்ருஷ்ணர் கோவில்கள் உள்ளன என்று தெரிந்தது. மேலும் விசாரித்ததில் அங்குள்ள பங்கே பெஹாரி கோவில் தான் ப்ரசித்தம் என்கிற விஷயம் தெரிய வந்தது. அந்த கோவிலொரு குறுகலான சந்துக்குள் 100 மீடர் உள்ளே இருந்தது. இங்கே என்ன விசேஷம் என்றால் விக்ரஹங்களுக்கு  முன்னால் இருக்கும் திரை மற்ற கோவில்கலில் உள்ள மாதிரி எப்பொழுதும்  திறந்து வைக்கப்படுவதில்லை. கொஞ்ச நேர இடைவெளியில் அடிக்கடி திறப்பார்கள்.பகவானின் கண்களின் தீக்ஷண்யம் சிறிது நேரம் பார்த்தாலே மயக்கமடைய செய்யுமாம். இங்கு மணிகளை அடித்தோ சங்கை ஊதியோ ஒலிப்பதில்லை..ஒரே நெரிசலான மூச்சு முட்டும்படியான கூட்டம்.எப்படியோ முண்டியடித்து முன்னேறி ஒருவழியாக தரிசனத்தை முடித்துகொண்டு வெள்யில் வந்தோம்.கந்தசாமிக்கு நீண்ட நாள் விருப்பம் நிறைவேறியதில்  பரம திருப்தி.
அந்த சமயம் எனக்குள் ஒரு எண்ணம் நிழலோடியது. இந்த தரிசனம் தான் கடவுள் அந்த கனவில் சொன்ன சந்திப்போ என்று. சப்பென்று சற்று ஏமாற்றபட்ட உணர்வு தான் மேலோங்கி இருந்தது. வெய்யிலும் பசியும் சோர்வடைய சைய்தது. .கனவை பற்றி நண்பனிடம் சொல்லவில்லை.
“ஏன்ன ஆக்சு?சுரத்தில்லாம இருக்கே.பசியா?” என்று கேட்டான்.
“அதெல்லாம் இல்லை.லேசா தலைவலி” என்று சொல்லி சமாளித்தேன்.
அந்த குறுகலான சந்தின் மறு முனையில் காரை நிறுத்தி  இருந்தேன்.மெள்ளதான் நடக்க முடிந்தது.அப்பொழுது என் பின்னால் 60 வயதிருக்கும் தாடி மீசையுடன் கச்சலான உடல் வாகுடன் ஒரு மனிதன் ஹிந்தியில்”ஐயா,ஐயா என கூப்பிட்டு கொண்டே விடாமல்  தொடர்ந்தான்.தானாகவே பின்னால் வருவதை நிறுத்தி விடுவான் என நினைத்து  நான் திரும்பவேயில்லை. விடாமல் மெள்ள கூப்பிட்டு கொண்டே வந்ததால் ஒரு க்ஷணம் திரும்பி பார்த்து”ஓண்ணும் கிடையாது.தொந்திரவு பண்ணாதே,” என கடிந்து கொண்டு முகத்தை திருப்பி கொண்டேன்.
 நான் சொன்னதை சிறிதும் லக்ஷியம் பண்ணாமல் அந்த பிக்சைக்காரன் “கொஞ்சம் திரும்பி பார்த்தால் குறைந்தா போய்விடுவாய்.மனதில் ஈரமே இல்லையா?கோவிலில் கடவுளை மாத்திரம் பார்த்தால் போதுமா?” என நச்சரித்து கொண்டே துரத்தி வருவதை விடவில்லை.நானும் விடாப்பிடியாக திரும்பவே இல்லை.
அந்த சந்தின் கோடியை நெருங்கி கொண்டிருந்தோம்.
”ஐயா,ஒரு தடவை நின்று பார்க்ககூட முடியாத அவசரமா? கருணை பக்சாதாபம் இல்லாமல்  கோவிலுக்கு வந்து  என்ன பலன்?”என்று  சொல்லிகொண்டே என்னுடைய சொக்காயை பிடித்து மெள்ள இழுத்தான். என்னுடைய கோபம் தலைக்கு மேல் ஏறிவிட்டது.என்ன தைரியம் இருந்தால் சொக்காயை பிடிப்பான்.
“உனக்கு ஒரு தடவை சொன்னால் புரியாதா? மரமண்டையா அல்லது திமிரா? உழைத்து சாப்பிடுவதுதானே. உனக்கு செல்லா காசு கூட  கொடுக்க மாட்டேன்.இதற்கு மேலும். என்னை பின் தொடர்ந்தால் நடப்பதே வேறு.போ’ என்று உரக்க கத்தினேன்.மற்றவர்கள் என்னை திரும்பி பார்க்கவே வேகமாக நடந்தேன்.
“உனனோட காசு யாருக்கு வேணும்? மனிதனேயம் இல்லாத உனக்கு கோவில் வருவது ஓன்றும் பலனளிக்காது,”எனக்கூறி ஒதுக்குப்புறமாக நகர்ந்து விட்டான்.
கொஞ்ச தூரம் நடந்த பிறகு திரும்பி பார்த்தேன்.அவனை காணவில்லை.மனதில் ஒரு குற்ற உண்ர்வு.ஏன் இப்படி    ஒரு ஏழையிடம் இத்தனை குரூரமாக நடந்து கொண்டேன் என ஒரு மன உளைச்சல்.அவனை தேடி நூறு ரூபாய் கூட  கொடுக்க தயாராக இருந்தேன்.ஆனால் என் துரதிர்ஷ்டம் அவன் கும்பலில் கரைந்து விட்டான்..என்னுடைய பசி போய்விட்டது.டெல்லி திரும்புகையில் பேசாமல் கண்களை  மூடிகொண்டு அவனை பற்றியே நினைத்து கொண்டிருந்தேன்.
” ஏன் தலை வலி அதிகமாகிவிட்டதா.காபி குடித்தால் சற்று குறையும்” என்றார் என் நண்பர் கந்தசாமி.
“வீட்டிற்கே நேர போய்விடலாம். மனைவி டின்னருக்கு  நமக்காக காத்துகொண்டிருப்பாள்”என்றேன்.
அன்று இரவு மனைவியுடன் தனிமையில் இருக்கும் பொழுது என் கனவை பற்றி சொன்னேன்.அவளுக்கும் ஆச்சரியமாக இருந்தது. கனவுகளை பற்றியும் அவைகளின் சாத்தியகூறுகளை பற்றியும் பொதுவாக பேசினதில் சரியான முடிவுக்கு வர முடியவில்லை. வெகு சிலதுதான் நடக்கிறது என்பதில் அபிப்ப்ராய பேதம் இல்லை.
ப்ருந்தாவன்கோவில் பயணம் பற்றி கேட்டபொழுது அன்றைக்கு நடந்தது பற்றி விவரமாக சொன்னேன்.நான் அந்த வறியவனிடம் நடந்து கொண்ட கீழ்த்தரமான முறை என்னை எப்படி வாட்டி எடுக்கிறது என்பதை பற்றியும் விவரித்தேன்.
அதை கேட்டவுடன் அவள் சடாரென்று எழுந்து உட்கார்ந்து”உங்களுக்கு ஒரு விஷயம் புரியவில்லையா? உங்களை பின் தொடர்ந்தவர் உங்களை ஒரு தடவையாவது காசு கேட்டரா?திரும்பி பாரேன் என்றுதானே பல தடவை சொல்லி கொண்டிருந்தார்.பிக்சைக்காரனாக இருந்தால் ஒரு  ஆள் பினனாடியே போய் நேரத்தை விரயமாக்குவானா?ஆந்த நேரத்தில் பல பேரை அண்டி பணம் சேர்ப்பதிலேயே குறியாக இருப்பான் அல்லவா?,அது உங்களுக்கு விசித்திரமாக படவில்லையா?உங்களை பின்தொடர்ந்தவர் க்ருஷ்ண பகவானே தவிர வேரு யாருமில்லை.அவர் வாக்குறுதியை காப்பாற்றினார்.நீங்கள்தான் பகவான் என்றால் சங்கு சக்ரகதாபாணியாக மஞ்சள் பீதாம்பரத்தில் மாலை மணிகளுடன் வருவார் என எண்ணிக்கொண்டு கோட்டை விட்டு விட்டீர்கள்.வேறு ரூபத்திலும் வரக்கூடும் என உங்களுக்கு தோணவில்லையா?உங்களுக்கு கொடுப்பினை இல்லை.கவலைப்படவேண்டாம். இது ஒரு படிப்பினை.ஏழை எளிய மக்களிடம் கருணையும்,பச்சாதாபமும் காண்பிக்க வேண்டும்.கடவுளுக்கு தன்னை வந்து தரிசனம் செய்வதை விட வசதி இல்லதவர்களுக்கு செய்கிற உதவிதான் உவக்கும்."என்றாள்
அதற்கு பிறகு பல தடவை ப்ருந்தாவனுக்கு சென்ற போது அந்த நபர் என் கண்களில் புலப்படவே இல்லை.ஏமாற்றமாக இருந்தாலும் என்னை முற்றிலும் மாற்றி கொண்டு விட்டேன்

12 comments:

  1. Deivam manushya roopena. God wants to come near us. Only we ignore Him thinking God will be dressed in such and such manner.

    ReplyDelete
  2. Good story. 1st time hearing about that temple.

    ReplyDelete
  3. ப்ருந்தாவனுக்கு அழைத்துப்போய்விட்டீர்கள்.. இன்னும் பார்க்காத குறை வாசிக்கையில் தீர்ந்தது. தெய்வதரிசனம் பெறவும் நமக்கு அதிர்ஷடம் இருக்கணும் உணரமுடியாமல் பலவற்றை இழக்கிறோம் மிகஎளிமையாக அருமையான கதை சொல்ல உங்களால்தான் முடியும்!

    ReplyDelete
  4. நல்ல கருத்துள்ள கதை.

    ஆண்டவன் கற்சிலையிலும் இருப்பான், கற்பனையிலும் இருப்பான், நம்மைச்சுற்றி இருக்கும் மாந்தரிலும் இருப்பான். அதானல் அவன் தரிசனம் கிடைக்க நம் மனதை எப்பொழுதும் திறந்து வைத்திருப்பது மிக அவசியம்.

    ReplyDelete
  5. அருமையான கதை. கொஞ்சமும் தொய்வில்லாமால் அழகாக எழுதியிருக்கிறீர்கள். அவர் மனைவி மிகச் சரியாக சொன்னாள். கொஞ்சம் யோசித்திருந்தால் புரிந்திருக்கும். சங்கு சக்ரா கதா பாணியாக வந்தால் மட்டும்தான் கடவுள்னு நினைக்கிறோம். இது ஒரு படிப்பினை.

    ReplyDelete
  6. நேர்த்தியான கதை . கடவுளும் மனிதைப் போலவே சிந்திப்பார், மனிதனைப் போலவே நடந்து கொள்வார் என்று நாம் நினைப்பது எவ்வளவு மடத்தனம் என்பதை தெள்ளத் தெளிய உணர வைத்து விட்டீர்கள் .

    ReplyDelete
  7. Change should from within. The last line in the story says it all. Nice

    ReplyDelete
  8. மிக மிக அற்புதம்
    நிகழ்வும் அதைச் சொல்லிச் சென்றவிதமும்
    ஆம் நாமாக கடவுளுக்கு ஒரு உருவம்
    கொடுத்துக் கொண்டு அப்படி வந்தால்தான் கடவுள்
    என திண்ணம் கொண்டு நம்மை நாம்தான்
    ஏமாற்றிக் கொள்கிறோம்
    மனம் கவர்ந்த பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. அருமை...

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  10. Such awesome write up Sir. Glad to be here after ages i say.

    ReplyDelete
  11. மிக மிக அற்புதமநல்ல கருத்துள்ள கதமனம் கவர்ந்த பதிவு.

    ReplyDelete
  12. Most captivating story told in simple language.It is the Karma factor that drives us not we ourself.He can give you a direction not make you do it.

    ReplyDelete