மாலை
ஏழு மணி இருக்கும். லேசாக தூறிகொண்டும் இருக்கிறது. தெருவில் ஜன நடமாட்டம் இல்லாமல்
விரிச்சோடிருந்தது. தெரு விளக்குகளும் சூரியகுஞ்சாக மங்கலாக எரிந்து கொண்டிருந்தது.
அதில் சில விளக்கு கம்பங்கள் மாத கணக்கில் எரியவில்லை. நல்ல வேளை என் வீட்டு வாசலில்
உள்ள விளக்கு எரிந்து கொண்டிருந்தது. நான்
இருக்குமிடம் ஊருக்கு சற்று ஒதுப்புரமாக உள்ளது. பரவியிருந்த நிசப்தம் சொல்ல தெரியாத
மனக்கிலேசத்தை உண்டாக்கியது. நான் வீட்டில் தனியாக வரவேற்பறையில் விளக்கை போடாமல் டி
வி பார்த்துகொண்டு இருந்தேன். அம்மா அப்பா பக்கத்து ஊரில் ஒரு கல்யாணத்திற்கு சென்றிருந்தார்கள்.
வர இரண்டு நாட்கள் ஆகும். நான் யார் என்று சொல்ல மறந்து விட்டேனே, என். பெயர் கோகிலா,
வயது இருபது காலேஜில் கடைசி வருஷம்.
தெருவில்
திடீரென்று வேகமாக வந்துகொண்டிருந்த ஏதோ ஒரு காரின் டயர்கள் தரையை தேய்த்துகொண்டு க்ரீச்சென்ற
சப்தத்துடன் நின்றது. சட்டென்று முன்பக்கமுள்ள அறைக்கு விரைந்து விளக்கை போடாமல் ஜன்னல்
திரையை லேசாக தள்ளி பார்த்தேன்.ஒரு பெரிய கார்,,ஸ்கார்பியோவோ என்னவோ, ஒரு சின்ன மாருதி
காரின் முன் வந்து வழிமறித்து நின்றது.மாருதி
காரின் ட்ரைவரை வெளியே இழுத்து நான்கு ஆட்கள் சரமாரியாக சவுக்கு கட்டையாலும் அரிவாளாலும்
சைக்கிள் சையினாலும் தாக்க தொடங்கினார்கள்.தப்பிக்க முடியாமல் கூக்குரலிட்டும் யாரும்
உதவிக்கு வரவில்லை.எல்லோர் வீட்டு கதவுகளும் மூடியே இருந்தன...அவர்களை கெஞ்சி கொண்டு
இருந்தபோதிலும்,அந்த குண்டர்கள் அவனை வெறி
பிடித்தாற்போல் இன்னும் பலமாக தாக்கி அவனை குற்றுயிரும்கொலையுயிருமாக கீழே ரத்த வெள்ளத்தில்
விட்டுவிட்டு சற்று நேரம் அவன் உடல் அசைவுகள் நிற்கும் வரை காத்திருந்தனர்.பிறகு சுற்றுமுறறும்
யாரும் பார்க்கவிலலை என நிச்சயித்த பின்னர் காரில் வேகமாக தப்பி சென்றுவிட்டனர்.ஒரு
விளக்கு கம்பத்தின் கீழே இந்த அட்டூழியம் நடந்ததால் என்னால் ந்ன்றாக பார்க்க முடிந்தது.சில வீடுகளில் விளக்கு
எரிந்தும் யாரும் வெளியில் வரவில்லை. வெளியே வர பயம்தான் காஈணமாக இருக்கலாம்
வெளிச்சம்
சற்று குறைவாக இருந்த போதிலும் அடியாட்கள் உள்ளூர் வாலிபர்கள் மாதிரி இருந்தது. தலையை
சிகப்பு துணியால் மூடி இருந்தனர். காரில்
ஏறும்போது விளக்கு வெளிச்சத்தில் அவர்களின் கொடூர முகங்களை என்னால் ஒரு க்ஷணம் பார்க்க
முடிந்தது.
சின்ன
பெண்ணாக இருப்பதால் உடனே வெளியில் வந்து அந்த ட்ரைவரை பார்க்க இயலவில்லை. அச்ச்த்தாலும்
மிருகத்தனமான் தாக்குதலாலும் ஒரே ஆடிப்போய் நெஞ்சம் படபடத்தது. சில தெரு நாய்கள் அடிபட்ட
ஆளை சுற்றி குரைத்து கொண்டிருந்தன. வெகு நேரம் கழித்து ஒருவர் பின் ஒருவராக வீடுகளிலிருந்து
வெளியே வரத்தொடங்கினர். யாரோ போன் போட்டதாலோ என்னவோ சற்று நேரத்தில் போலீஸ் வண்டி ஒரு
ஆம்புலன்ஸ் பின் தொடர வந்தது. உடலை வண்டியில் ஏற்றிய பிறகு எதையோ அளந்து கொண்டும் சாக்கு
பீஸால் கோடுகள் போட்டவண்ணம் இருந்தனர். போலீஸார் சூழ்ந்துள்ளவர்களை நடந்த சம்பவம் பற்றி
விசாரிக்க தொடங்கினர். சிலர் நழுவ தொடங்கினர். மாட்டிகொண்டவர்கள் தங்களுக்கு டிவி சப்தத்தில்
ஒன்றும் காதில் விழவில்லையென்றும் நாய்கள் குரைத்த பிறகு தான் எட்டி பார்த்ததாகவும்
ஒரே மாதிரி சொன்னார்கள். வீணாக வம்பில் மாட்டி கொண்டு போலீஸுக்கும் கோர்ட்டிற்கும்
அலைய வேண்டாமே என்கிற முன் ஜாக்கிரதை தான் காரணமாக இருக்கலாம்.
மறு நாள் எல்லா பத்திரிகைகளிலும் கொட்டை கொட்டையாக
இந்த கொலை பற்றி சைய்தி வந்தது. ஒரு வாரம் ஆன பின்னரும் எந்த தடயங்களும் கிடைககாததால்
கேஸில் ஒரு முன்னேற்றமுமில்லை. பழைய விரோதமோ, கொடுக்கல் வாங்கல் ப்ரச்னையோ கூலிப்படையின்
கொலைக்கு காரணம் தெரியவில்லை.
கிடப்பில்போட்டுவிட்டார்களோ
என எனக்கு ஒரு சந்தேகம். ஆனால் ஒரே ஒரு லாபம். தெரு விளக்குகள் எல்லாம் எரிய ஆரம்பித்து
விட்டன.
ஒரு வாரம்
கழித்து ஒரு ஞாயிறு மாலையில் நான் தனியாக வீட்டில் வரவேற்பறையில் டி வி பார்த்து கொண்டிருந்தேன்,
வாசல் வராண்டாவில் ஏதோ நிழலாடியது போல தோன்றியது. ஜன்னல் திரையை விலக்கி பார்த்ததில்
ஒரு முப்பது வயதுள்ள சற்று குள்ளமான ஆண் கூர்மையான மூக்குடன் கமல் உடல்வாகுடன் அங்கு
நிற்கிற மாதிரி தெரிந்தது. யூனிபார்ம் மாதிரி வெள்ளை பேண்ட்டும் வெள்ளை சொககாயும் அணிந்த
உருவத்தின் முகம் சரியாக தெரியவில்லை. ஆனால் அந்த உருவம் ஏதோ சொல்ல தெரியாத விசித்திரமாக
பட்டது, ஏன்னவென்று சரியாக அனுமானிக்க முடியவில்லை.
“யாரு
நீங்க, என்ன வேண்டும்?” என வினவினேன் கதவை திறக்காமல்.
“உங்களுக்கு
என்னை தெரியாது. ஆனால் உங்கள் சின்ன உதவி அவசரமாக தேவை,” என சற்றே கீச்சு குரலில் கேட்டான்.
புரிவதற்கு சற்று கடினமாக இருந்தது.
“ஏன்ன
உதவி?”
“ஒரு
வாரம் முன்னால் இங்கு நடந்த கொலை பற்றி சின்ன தகவல் தருகிறேன் தயவு செய்து போலீஸுக்கு
அதை தர இயலுமா? அதை வைத்துகொண்டு அவர்களால் குற்றவாளிகளை உடனேயே எளிதில் கைது செய்யமுடியும்.”
“நீங்களே
அந்த தகவலை அவர்களிடம் கொடுப்பது தானே. நீங்க யாருன்னு சொல்லலியே”
“இரண்டு
காரணங்கள் உண்டு. நான் சொன்னால் எடுபடாது. தவிர என்னால் அங்கு போகும் நிலையில் நான்
இல்லை. நீங்களே போக அவசியமில்லை. யாரென்று சொல்லிகொள்ளாமல் கூட தகவலை சேர்ப்பித்தால்
போதுமானது. அந்த குண்டர்கள் தப்பிக்க கூடாது.” என்றான் ஆத்திரத்துடன்.
“நான்
சொல்வேனென்று நிச்சயமாக கூற முடியாது. தகவலை பொறுத்தது. இஷ்டமிருந்தால் சொல்லுங்க”
என்றேன்.
“சரி
நான் அவங்க யார்யாரென்று சொல்றேன். இது உண்மை. மறக்காம போலீஸிடம் சொல்லிடுங்க. கவனமாக
கேளுங்க” என நான்கு குண்டர்களின் பெயர்களையும், தங்கும் விவரங்களையும், அவர்களின் வேலை
பற்றியும் கூறினான்.
“கொஞ்சம்
இருங்க. காகிதத்திலே எழுதிக்கறேன்” என்று சொல்லி உள்ளே ஓடினேன். ஒரு நிமிஷத்தில வந்து
பார்த்தால் ஆளை காணவில்லை. நல்ல வேளை ஒரு ஆள் விலாசம், ஒரு ஆள் வேலை தவிர. ஒன்றையும்
மறக்கவில்லை. ஏழுதி வைத்துகொணடேன்.
அடுத்த
நாள் அப்பாவுடன் போலீஸ் இன்ஸ்பெக்டரை பார்த்தேன். என்னிடம் சில முக்கிய தகவல்கள் உள்ளன
என்றும் அதை பரிமாறிக்க என்னுடைய பெயர் வெளியே வரக்கூடாது என்றும், நான் சாக்ஷியாக
வர இயலாது என்றும் அதற்கு ஒப்புகொண்டால் தகவல்களை கூறுவதாக சொன்னேன்.
இன்ஸ்பெக்டர்
சரியென்று சொல்லவே என்னை வந்து பார்த்த ஆள் பறறியும், அவன் கூறின விஷயங்களையும் சொனனேன்.
இன்ஸ்பெக்டர்
அந்த ஆளை பற்றி விரிவாக விவரிக்கும்படியாக கேட்டுகொண்டார். முக்கியமாக உயரம், வயது,
குரல், வேறு ஏதாவது வித்தியாசமாக பட்டிருந்தால் அதையும் சொல்ல சொன்னார்.
ஏல்லவரற்றையும்
சொல்லிவிட்டு, அவன் கூர்மையான மூக்கை பற்றி சொன்னேன். அசப்பில் கமலை போல உடல் வாகு
என்பதையும் கூறினேன். ஆனால் அந்த ஆள் அவ்வளவு பளிச்சென்று தெரியலை ஏதோ மங்கலாக சோகையாக
தென் பட்டான் என்பதையும் தெரியப்படுத்தினேன்.
“இதை
பாருங்க. இந்த ஆளை எங்கேயாவது பார்த்து இருக்கீங்களா? நிதானமாக பார்த்து சொல்லுங்க,”
என சொல்லி மேஜை ட்ராயர்லேந்து ஒரு போட்டோவை கொடுத்தார்.
அதை பார்த்தவுடன்
எனக்கு தூக்கி வாரி போட்டது. அப்படியே நாற்காலியிலேந்து எழுந்து” இதே ஆள் தான் தகவல்களை
கொடுத்தான். உங்களுக்கு எப்படி இவனை தெரியும்?” என ஆக்சரியத்துடன் கேட்டேன்.
மெலிதாக
ஒரு சிரிப்புடன் “ஓரு சின்ன ஷாக்கு உங்களுக்கு தரப்போகிறேன். ஒரு தரம் மூச்சை இழுத்து
விடுங்க” என்றார்.
“இந்த
ஆள்தான் கொலை செய்யபட்ட நபர். நீங்க சொன்னது நம்ப முடியாத விஷயமாக இருந்தாலும், நான்
இதை வைத்துகொண்டு துப்பு துலக்க போகிறேன். மேல உயர் அதிகாரிகளுக்கு சொன்னால் சிரிப்பாங்க.
எனக்கு உங்க பேரில பொய் சொல்லமாட்டீங்க என முழு நம்பிக்கை இருக்கு. கவலைப்படாதீங்க.
இது ரகசியமாகவே இருக்கும்,” என்றார்.
இரண்டு
நாட்களுக்கு பிறகு பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் கொட்டை கொட்டையாக எப்படி போலீஸ்
இன்ஸ்பெக்டர் துரித வேகத்துடனும், சாமர்த்தியமாகவும் செயலாற்றி ஒரு தடயமும் இல்லாத
இந்த கொலையை செய்த ரவுடிகளை பத்தே நாட்களில் கண்டு பிடித்து உள்ளே தள்ளினார் என்கிற
விவரம் விலாவாரியாக வந்திருந்தது. குற்ற்வாளிகளே விசாரணையின் போது குற்றத்தை ஒப்புகொண்டுவிட்டது
இன்ஸ்பெக்டருக்கு நல்ல பெயரை சம்பாதித்து கொடுத்தது.
என் அம்மா
எனக்கு த்ருஷ்டி கழித்து போட்டது ஒரு சின்ன உபரி விஷயம்.
Interesting story. Thanks
ReplyDeleteNice one. Pls write more supernatural genre. Vasudha
ReplyDeleteஅற்புதம்
ReplyDeleteசொல்லிச் சென்றவிதம் கதைக்கு
கூடுதல் சிறப்பினைச் சேர்க்கிறது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
Sir, you have maintained the suspense and supernatural effect till the end, almost like a Night Shyamalan film !!
ReplyDeleteVery interesting story! Felt happy to know that the culprits were punished at least in this story!
ReplyDeleteசுவையான கதை.தற்சமயம் நடைபெறும் பல மர்மமான கொலைநிகழ்வுகளில் கொலையானவரே வந்து சாட்சி சொன்னால்தான் கொலைகாரர்களைக் கண்டுபிடிக்கமுடியும். இந்த உண்மையை அழகாக கதை மூலமாக சொல்லிவிட்டீர்கள். பாராட்டுகள்.
ReplyDeleteஅற்புதம். சுவையான கதை. நல்வாழ்த்துக்கள்
ReplyDelete