தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் குழந்தை தொழிலாளர்களின் அவலம் பற்றி கூட்டம்..சேரியின் பக்கத்தில் கூட்டம் என்பதால் நல்ல கூட்டம்.முக்கியமாக தாய்மார்களும் குழன்ன்தைகளும்தான் காணப்பட்டனர்.
"நமது நாட்டில் ஏழ்மை காரணமாக குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர் குழந்தைத் தொழிலாளர் சட்டப்படி, 16 வயது நிறைவு பெறுவதற்கு முன்பாக குழந்தைகளைப் பணியில் அமர்த்தக்கூடாது.இருப்பினும் டி கடை,,ஓட்டல்கள்,மளிகை i மற்றும் வணிக நிறுவனங்களில்,
தீப்பெட்டி,பட்டாசு தொழில்களில் முக்கியமாக வீடுகளில் ஈடுபடுத்தபடுகின்றனர். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்" என்று ராஜமாணிக்கம், முழங்கினார்.
"நாட்டில் ஒரு குழந்தை வேலையில் ஈடுபட்டால் கூட நமக்கு பெரிய இழுக்கு என்று சொல்ல ஆசைப்படுகிறேன்.பெற்றோர்கள் சம்மதித்தாலும் இந்த அவலம் அனுமதிக்கப்படக்கூடாது. குழந்தைகளின் கல்வி ,உடல் நலம்,சமூக மேம்பாடு பாதிக்கப்படும் அரசு ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்ளுகிறேன்.ஒவ்வொரு குழந்தைக்காக ஏழை குடும்பங்களுக்கு மாதம் 1000 ரூபாய் அரசு கொடுக்க வேண்டும்." என்றவுடன் பலத்த கைதட்டல்
காரிலிருந்து வீட்டிற்க்குள் நுழையும்போதே "மீனாக்ஷி,,அந்த வேலைக்கார சிறுவன் பாபுவை மேலே அனுப்பு.கூட்டத்தில் நின்று கொண்டே பேசியதில் கால்கள் ஒரே வலி" என்றார்
படுக்கையில் காலை நீட்டி படுத்துகொண்டார்.அந்த 10 வயது பாபு அவரின் கால்களை நின்றுகொண்டே பிடித்து விட்டு கொண்டிருந்தான்..அவர்'அம்மா,அப்பா' என்று முனகிக்கொண்டு "அழுத்தி பிடிடா,பேமானி"என்றார். கிட்டத்தட்ட ஒரு மணி பிடித்தும் போறும் என்று சொல்லாமல் அந்த சிறுவன் தலையில் நறுக்கென்று குட்டினார்."தூங்கி வழிகிறாயே,நாயே.. தோலை உறிச்சுடுவேன், நன்னா பலமா பிடி" என்று திட்டினார் குழந்தை தொழிலாளர்களின் ஆதரவாளர்.
Knew right away how this would end. But still enjoyed reading.
ReplyDeleteWish the boy was bigger. 9 hits home as Josh my son just turned 9!
I have since made him older!!!
ReplyDelete