Sunday, July 15, 2012

வட்டியும் முதலும்

'அய்யா,ரெண்டு நாளா சாப்பிடலை.ஒரே பசி எதாவது கொடுத்தீங்கங்கன்னா கோடி புண்ணியம் உங்களுக்கு" என்றாள் சிறுமி

"போ,போ அவசரமாக கிளம்பிண்டு இருக்கேன்.அப்புறம் பார்க்கலாம் " என்றார் புண்ணியகோடி மோட்டார் பைக்கை உதைத்தவாறே.

"அய்யா,உயிர் போய்விடும் போல பசிக்கிறது.ஒரு 'பன்'நுக்காவது காசு கொடுங்க அய்யா".

."ஒரு தடவை சொன்னா தெரியாது,போ அப்பாலே"என்று சள்ளென்று விழுந்தார்

பெரிய அதிகாரி முன் குளு குளு அறையில் புண்ணியகோடி நின்று கொண்டிருந்தார்
.
"என்ன வேண்டும்" என்றார் முகத்தை அவர் பக்கம் திருப்பாமலேயே.

"போன வருஷமும் சம்பள உயர்வு ரொம்ப குறைவு.இந்த வருஷம் பார்த்து போட்டு கொடுத்தீங்கன்னா உங்களுக்கு கோடி புண்ணியம் உண்டு"

""வேற வேளை கிடையாதா?காலங்காலையில் தொந்திரவு பண்றீங்களே .அப்புறம் பார்க்கலாம்"என்றார் அதிகாரி

"இந்த நேரம் விட்டா உங்களை பார்க்க முடியாது.ரொம்ப கஷ்டமாக இருக்கு.பசங்க படிக்கறாங்க. கொஞ்சம் தயவு பண்ணனும்"

"ஒரு தடவை சொன்னா தெரியாது.போயிட்டு வாங்க.நான் மும்முரமாக இருக்கேன் "என்றார் சற்று எரிச்சலுடன்

2 comments:

  1. நிதர்சனம் சொல்லி மனம் திடுக்கிடவைத்துவிட்டீர்கள். அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. and therein follows a cycle pattern...

    ReplyDelete