Monday, July 16, 2012

ஏழைகள் சிரிப்பில் இறைவன்

அன்று திருவிழா.கோவிலில் ஒரே கூட்டம்.வழி நெடுக இரண்டு பக்கமும் பிச்சைகாரர்கள் கூட்டம்.கைகளில் கைக்குழந்தையுடன் தகர குவளைகளோடு தாய்மார்கள்.வருவோர் போவோர் ஒவ்வொரிடமும் அய்யா,சாமி,தாயே, என்று பரிதாப குரல்கள்..அதை கண்டுகொள்ளாமல் எல்லோரும் தைய்வத்தை காணவே மும்முரம் காட்டி க்யூவில் நிற்க முன்னே சென்றார்கள்..

பெரிய காரிலிருந்து தாட்டியான மனிதர் இறங்கினார் சரிகை வேஷ்டி இடுப்பில் அங்க வஸ்திரம் விபூதிக்கடியி l பெரிய சந்தன பொட்டுடன் கூடிய குங்குமம்.கழுத்தில் தங்க சங்கிலி.பார்த்தால் பெரும் பணக்கார தோற்றம்.

பக்தர்கள் கும்பலை பார்த்து மலைத்து விட்டார்.பிச்சைக்கார கூட்டத்தி அய்யா,சாமி ஒலி உச்சத்தை அடைந்தது

அந்த சமயம் காக்கி உடுப்புடன் கோவில் சிப்பந்தி போல ஒருவர் அவரை நெருங்கினார்.கசமுசவென்று சிறிது நாழி பேச்சு..ஜேபியிலிருந்து 200ரூபாய்கள் கைமாறியது..

தப தபவென்று பணக்காரர் சிப்பந்தியுடன் முன்னேறினார்.சந்நிதியை நெருங்க நெருங்க கூட்டம் அலை மோதியது. வரிசையில் மக்கள் பொறுமையாக காத்துக்கொண்டிருந்தனர்.

அந்த சிப்பந்தி"இங்கு சற்று இருங்கள்.ஒரு நொடியில் வந்து விடுகிறேன்"என்று கூறி நகர்ந்தார்.ஒரு நொடி ஒரு மனியாகியாது.

சரி,ஏமாந்து விட்டோம்.அடுத்த முறை சற்று முன்னதாகவே வந்து தரிசனம் பண்ணலாம் என்கிற எண்ணத்தோடு வெளியில் வந்தார்.

அதே பிச்சைக்கார கூட்டம் அய்யா சாமி கூப்பாடோடு சொல்லியது "அந்த ஆளு ஏமாத்து பேர்வழி.உங்களுக்கு ஜாடை மாடையாக காமித்தோம்.நீங்கதான் எங்கள் பக்கம் பார்க்கவில்லையே." என்றார்கள்

"ஒரு நிமிஷம்.இதோ வந்து விட்டேன் " என்று பக்கத்து கடைகள் பக்கம் போய்விட்டு திரும்பி வந்தவர் "வரிசையாக உட்காருங்கள்" என்றார்.

ஒவ்வொருவரிடமும் புத்தம் புதிய 5ரூபாய் நாணயம் கொடுத்தார்.."எல்லோருக்கும் கிடைச்சுதா?யாருக்கும் விட்டுப்போகலையே?"

எல்லோர் முகத்திலும் ஒரு சிரிப்பு,சந்தோஷம்..,தரிசனம் பண்ணிய ஒரு திருப்தியுடன் காருக்கு சென்றார்

.


2 comments:

  1. nice that he did not shower his frustration on the beggars and his action proves a good heart person.

    ReplyDelete