Friday, October 29, 2010

இப்படியும் இந்த காலத்தில் ஒரு சிலர் -3

சாமந்தி பூ
தீபாவளிக்கு என் வீட்டில் வேலை செய்யும் பெண்ணிற்கு புடவை எடுக்கலாமென்று கடைக்கு சென்றிருந்தேன்.ஒரே கூட்டம்,நெரிசல் தாங்க முடியவில்லை.சட்டென்று வாங்கி வருவதில் மும்முரம் காட்டினேன். ஆனால் புடவை எடுத்து போடுபவரோ " அம்மா இதை பாருங்கள், புது டிசைன் உங்களுக்கு எடுப்பாக இருக்கும்" என்று எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மேலும் மேலும் பல புடவைகளை வலு கட்டாயமாக காண்பித்து கொண்டிருந்தார்.எனக்கு எரிச்சல் வந்தது.நான் எனக்கு புடவை வாங்க வரவில்லை என்று தீர்மானமாக சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.பாவம்,புடவை அதிகம் விற்றால் கூடுதல் பணம் விற்கும் நபர்களுக்கு கிடைக்கும் போலும்.இருந்தாலும் ஒரு தொந்திரவாக பட்டது.

அன்று மாலை கோவிலுக்கு சென்றிருந்தேன்.சுவாமிக்கு பூ வாங்கலாமென்று பூ விற்கும் கடைக்கு சென்றேன்.சின்ன பெண்.பதினைந்து வயது இருக்கும்.மல்லிகை பூ நன்றாக இருந்தது.

"முழம் என்ன விலை?" .என கேட்டேன்

"பத்து ரூபாய்" என்றாள்

'ஜாஸ்தி"
"சரி,மூன்று முழம் இருபத்து ஐந்து ரூபாய் கொடுங்கள்" என்றாள்

வாங்கி கொண்டேன்.சாமந்தி மிகவும் அழகாக மஞ்ச மஞ்சளேரென்று இருந்தது.

"சாமந்தி மூன்று முழம் கொடு " என்றேன்

வீட்டுக்கா" என கேட்டாள்.

"இல்லை,சுவாமிக்கு சாத்தத்தான் "என்றேன்

பெருமாள் சன்னதிக்கா " என்று கேட்டாள்

"ஆமாம்" என்றேன்

"அங்கு சாமந்தி சாத்த மாட்டார்கள்" என்று சொன்னாள்.

உடனே எனக்கு காலையில் புடவைக்கடையில் எனக்கு வேண்டாத புடவையை விற்க முயற்சித்தது ஞாபகம் வந்தது..

இங்கோ ஏழ்மையான பெண்ணாக இருந்தும் உபயோகமில்லாத பொருளை நான் வாங்க கூடாது என்பதில் ஒரு கரிசனம்.அங்கோ எனக்கு வேண்டாததை தலையில் கட்டுவதில் ஒரு மும்முரம். எனக்கு அந்த பெண்ணை ஒரே பிடித்துவிட்டது.

"சரி,இன்னும் மூன்று முழம் மல்லிகை கொடு. முழம் பத்து ரூபாயாகவே இருக்கட்டும்" என்றேன்.

அந்த பெண் ஒரு ஆச்சர்யம் கலந்த சிரிப்போடு என்னை பார்த்தாள்

"அம்மா,இனி என் கிட்டயே வாங்குங்க.சல்லிசா கொடுப்பேன்" என்றாள்

என்னே வித்யாசமான மனிதர்கள் .

8 comments:

  1. அது சரி.சாமந்திப்பூ பெருமாளுக்கு சாத்த மாட்டாளா என்ன? திருப்பதி பெருமாளை நெனச்சுபாருங்கோ

    ReplyDelete
  2. Sir, just got time to read your blog! It's really good. Keep churning out fantastic stuff as you always do.

    Is't true incident? Yeah, there are such people. I too 've had similar experience!

    ReplyDelete
  3. தீபாவளி சமயம் ,வேலைக்காரிக்கு தானே ஜவுளி ! எரிச்சல் வரத்தான் செய்யும் . மன அமைதியை நாடி கோவிலுக்கு போகும் போது நாம் சாந்தமாக தானே இருப்போம் ! சந்தோஷமோ எரிச்சலோ கோபமோ எந்த மனநிலையும் நம் கையில் தான் உள்ளது. இடம் பொருள் ஏவலை பொறுத்து நம் மன நிலை மாறுகிறது . மற்றவர்கள் காரணம் அல்ல என்று எனக்கு தோன்றுகிறது .
    சிந்திக்க வைக்கும் சிறு கதை ! Vazz.

    ReplyDelete
  4. A salesman selling sarees will only show the best
    and all varietes.nothing wrong on his part.

    A flower vendor who sells for temple will say which flower has to be adorned.

    Both are right.

    ReplyDelete
  5. :) "chinna ponnu thaane vyaabaaram theriyala polarukku"- appadeennu oru ennam.... aana initial trust gain panninaa vaadikka valukkum apdeengarathu innoru ennam! superb! :)

    ReplyDelete
  6. I wish I could understand the graphics written here...:((((

    ReplyDelete